அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விரைவில் வழங்கப்படவுள்ளது - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Wednesday, January 29, 2020

அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விரைவில் வழங்கப்படவுள்ளது




2020 ஜனவரியில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட மூடிய கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய காரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படுவதினால் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த வருடம் அரசாங்க ஊழியர்களின் சம்பளக்கொடுப்பனவானது அதிகரிக்கப்படுவதாகவும் அதில் 50% 2020 ஜனவரியிலும் மிகுதி 50% 2021 ஜனவரியிலும் வழங்கப்படும் என அரசினால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment