சாரதி அனுமதிப்பத்திரங்களில் QR குறியீட்டு முறை - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Saturday, September 3, 2022

சாரதி அனுமதிப்பத்திரங்களில் QR குறியீட்டு முறை

தற்பொழுது நடைமுறையிலுள்ள இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களில் Memory ship களுக்கு பதிலாக QR குறியீட்டு முறையினை அறிமுகம் செய்ய இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.



ஏற்கனவே Memory ship களை யூரோக்களில் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் திறைசேரியில் யூரோ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் Memory ship இறக்குமதி தடைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இக்காரணங்களினால் 1000,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் நிலுவையாக உள்ளதாகவும் வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு மாத்திரம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment