ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Wednesday, May 25, 2022

ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல்

அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல் தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.



எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாதமையால் அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளமை தொடர்பில் 2022.05.23 ஆந் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், அரசாங்க அலுவலகங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்குப் பாதிப்பில்லாதவாறு அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்குத் அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் வரை நிறுவனங்களால் வழங்கப்படும் பொதுமக்கள் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அத்தியவசியமாகத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையான உத்தியோகத்தர்களை மாத்திரம் 2022.05.26 ஆந் திகதி முதல் சேவைக்கு அழைப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுநிருபம்

No comments:

Post a Comment