கல்வி அமைச்சினால் மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக 2019 ஆம் ஆண்டு 2020 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர் தர) பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு (National College of Education) உள்வாங்குவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
1.0 இலங்கை தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருட கால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதற்கு ஆட்சேர்க்கும் வகையில் தேவையான கல்வித்தகைமைகளையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
- இதற்கு 2019 ஆம் ஆண்டில் அல்லது 2020 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் அல்லது பழைய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
- அனைத்து விண்ணப்பதாரிகளும் தொடரறா முறை (Online system) ஊடாக வர்த்தமானி அறிவித்தலில் 10.0 இல் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்’ பகுதியில் குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய விண்ணப்பிக்க வேண்டும்.
- 2019 அல்லது 2020 எனும் இரு வருடங்களுக்கும் உரியதாக விண்ணப்பிக்க தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தொடரறா(online) முறையூடாக உரிய க.பொ.த. (உயர் தர) வருடங்கள் இரண்டுக்கும் வேறு வேறாக தொடரறா முறையில் விண்ணப்பித்தல் வேண்டும்.
- விண்ணப்பித்தல் 2022, ஓகத்து 12 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

No comments:
Post a Comment