அதிகரிக்கப்படவுள்ள தொலைபேசி கட்டணங்கள் - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Saturday, September 3, 2022

அதிகரிக்கப்படவுள்ள தொலைபேசி கட்டணங்கள்

இலங்கையில் தொலைபேசி கட்டணங்கள் மற்றும் கட்டண அடிப்படையிலான தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.



இதனடிப்படையில் தொலைபேசி கட்டணங்கள் 20% அளவிலும், மற்றும் கட்டண அடிப்படையிலான தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் 25% வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறைகள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால வரவு செலவுத்திட்ட ஏற்பாட்டிற்கமைய பெறுமதி சேர் வரி 12% இல் இருந்து 15% வரை உயர்த்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என உரிய சேவைகள் வழங்குனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment