சலுகை வட்டி விகிதத்தில் கடன்கள் (Festival Advance) 0.625% - Kuruwin

Volunteering Service Online Application

Breaking

Wednesday, December 16, 2020

சலுகை வட்டி விகிதத்தில் கடன்கள் (Festival Advance) 0.625%



எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு 2020.12.16ம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

03 பிரிவுகளின் கீழ் இக்கடன் வழங்கப்படவுள்ளது. 

1. மாதத்திற்கு ரூ. 50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் பெருவோருக்கு ரூ. 50,000 கடனாக பெறலாம். 

2. மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும் ரூ .50,000 க்கும் இடைப்பட்டவர்களுக்கு ரூ.25,000 கடன் வழங்கப்படும். 

 3. மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும் குறைவாக இருந்தால், கடன் தொகை ரூ .10,000 ஆகும். 

இச் சலுகை கடன்கள் இலங்கை வங்கி (Bank of Ceylon), மக்கள் வங்கி (Peoples Bank), தேசிய சேமிப்பு வங்கி National Saving Bank), பிரதேச அபிவிருத்தி வங்கி (Rural Development Bank) மற்றும் சமுர்தி வங்கிகளின் (Samurthy Bank) ஊடாக வழங்கப்படுகின்றன.

துணை நிவாரண நிதி வசதிகள் பெற விரும்பும் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் நிறுவன தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களின் சான்றுப்படுத்திய சம்பளப் பட்டியலை சேவை நிலையத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, அந்த கிளையினால் ஊழியர்களின் கணக்குகளுக்கு உடனடியாக அந்த தொகை வரவு வைக்கப்படும். 

கடன் தொகை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன்  அறவிடப்படும் மாத வட்டி (monthly Interest) 0.625 வீதமாகும். கடன் தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலப்பகுதியில் ஊழியரின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும். 

அரச ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கான கடன் வழங்கல் ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் பேணப்படும் அரச வங்கிகளில் தங்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த பிரிவிற்குள் வராத ஆனால் அரச வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும் நாளாந்த வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் வங்கிகளின் ஊடாக நிதி வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment