திருத்தம்
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் தரம் III இற்கு (Librarian Service) ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2019 (2020)
கடந்த 2020, யூலை மாதம் 24 ஆந் திகதிய 2186 ஆம் இலக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட “இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019 (2020)” என்ற பரீட்சை அறிவித்தலில், 6.0 தகைமைகள் பந்தியின் குறிப்பிற்குரிய விடயங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவ்வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய ஏற்பாடுகள் அவ்வாறே வலுவிலிருக்கும் என்பதோடு இத்திருத்தங்கள் காரணமாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி 2021.05.13 ஆந் திகதி வரை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள் இத்திருத்தம் காரணமாக மீண்டும் ஒரு முறை விண்ணப்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வர்த்தமானி – Download
விண்ணப்பம் அடங்கியுள்ள வர்த்தமானி – Download

No comments:
Post a Comment