அதிபர், ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்த உப செயற்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இப்பரிந்துரைகள் தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானங்கள்
அ) அமைச்சரவை உபசெயற்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதை கொள்கை ரீதியாக அங்கீகரித்தல்
ஆ) ஆசிரியர் சேவை, ஆசிரிய ஆலோசகர் சேவை, அதிபர் சேவை ஆகியவற்றை வரைவிட்ட சேவையாக அறிவிக்கும் வர்த்தமானியை 2021.11.20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடல்.
இ) ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பான பரிந்துரைகளின் கீழ் சம்பள திருத்தங்கள் 2022 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தல்,
ஈ) 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கடமைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள், அதிபர்களுக்கு மாதாந்தம் 5000/- விசேட கொடுப்பனவு வழங்குதல்,
உ) உப செயற்குழுவின் ஏனைய யோசனைகள் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் மூலம் ஆறு மாதங்களில் நடைமுறைப்படுத்துதல்,

No comments:
Post a Comment